ஊவா மாகாண அமைச்சுகளின் விடயதானங்களில் இருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கம் - புதிய வர்த்தமானி வௌியீடு - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

ஊவா மாகாண அமைச்சுகளின் விடயதானங்களில் இருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கம் - புதிய வர்த்தமானி வௌியீடு

நாளை (02) முதல் அமுலுக்கு வரும் வகையில், ஊவா மாகாண அமைச்சுகளின் விடயதானங்களில் இருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கப்படவுள்ளது.

ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கூட்டுறவு விவகாரம் மற்றும் தமிழ் கல்வி தொடர்பான அமைச்சு என ஏற்கனவே இருந்த அமைச்சின் விடயங்களில் இருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர் A.J.M. முஸம்மிலினால் புதிய வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதுடன், நாளை முதல் அது அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் எங்கும் தமிழ் கல்விக்கென தனியான அமைச்சுகள் இல்லையெனவும், அவ்வாறு தனியாக தமிழ் கல்வி அமைச்சினை உருவாக்கியமையினால் கடந்த காலங்களில் தமிழ் கல்விக்கு பாதிப்பே ஏற்பட்டுள்ளதாகவும் ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மில் தெரிவித்தார்.

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் தமிழ் கல்விக்கென தனியான அமைச்சு தற்போது இல்லையெனவும் ஊவா மாகாணத்தில் மாத்திரமே இருந்ததாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் பிரிவினைகளே ஏற்படுவதாகவும் கடந்த நான்கு வருடங்களில் இடம்பெற்ற விடயங்களை ஆராய்ந்து பார்த்தபோது, தமிழ் கல்வி பாதிக்கப்பட்டுள்ளமையால் இந்த முடிவை எடுத்ததாக ஊவா மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad