சாய்ந்தமருதில் பள்ளிவாசல் தலைவர்கள், இமாம்களுடனான விஷேட கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

சாய்ந்தமருதில் பள்ளிவாசல் தலைவர்கள், இமாம்களுடனான விஷேட கலந்துரையாடல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தற்கால கொவிட்-19 நோய்ப் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பாக சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்துப் பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் இமாம்களுடனான விஷேட கலந்துரையாடலொன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் (20) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். அல்-அமீன் றிஸாத் தலைமையில் நடைபெற்ற இவ் விஷேட நிகழ்வில், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான பல வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் இதன்போது வழங்கினர்.

No comments:

Post a Comment