அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - 8 பேர் உயிரிழப்பு, 60 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 16, 2021

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - 8 பேர் உயிரிழப்பு, 60 பேர் காயம்

அமெரிக்கா, இண்டியானாபொலிஸ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஃபெடெக்ஸ் கிடங்கில் நடந்த வெகுஜன துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாகவும், 60 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மீட்க்கப்பட்டவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை இரவு 11 மணிக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளதாக இண்டியானாபோலிஸ் பெருநகர காவல் துறை அதிகாரி ஜெனீ குக் செய்தியாளர்களிடம் கூறினார்.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட துப்பாக்கி தாரி தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அவரது உடலை இரவு 11.23 மணிக்கு பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. பொலிசாரை குறி வைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.

துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து துப்பாக்கி கட்டுப்பாடுகள் தொடர்பாக ஜோ பைடன் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எனினும், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்கின்றன.

No comments:

Post a Comment