முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத மீன்பீடி - நான்கு படகுகளுடன் 6 மீனவர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, April 22, 2021

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத மீன்பீடி - நான்கு படகுகளுடன் 6 மீனவர்கள் கைது

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 படகுகளுடன் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம் கடற்படையினருடன் இணைந்து தொடர்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் வி.கலிஸ்ரன் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு நடவடிக்கையாக மாத்தளன் கடற்பரப்பில் கடற்படையினருடன் இணைந்து நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நான்கு படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் படகுகளில் சட்டவிரோதமான ஒளிபாச்சி மீன்பிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது இவர்களிடம் இருந்து ஒளிபாச்சும் கருவிகள் பற்றறிகள், தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

No comments:

Post a Comment