பாராளுமன்றத்தில் அமளிதுமளி - 5 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட அவை - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

பாராளுமன்றத்தில் அமளிதுமளி - 5 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட அவை

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக சபை நடவடிக்கைள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தீர்மானித்தார்.

அதற்கமைய, இன்று முற்பகல் 10.35 மணியளவில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டபோது இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது பாராளுமன்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad