தமிழகத்தில் 36 மணித்தியால ஊரடங்கு அமுல், தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் - பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும் வெளியிட்டது அரசு - News View

About Us

About Us

Breaking

Saturday, April 24, 2021

தமிழகத்தில் 36 மணித்தியால ஊரடங்கு அமுல், தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் - பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும் வெளியிட்டது அரசு

தமிழகத்தில் இன்று (24) இரவு 10 மணியிலிருந்து 36 மணித்தியால ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் உச்சநிலையைக் கருத்திற்கொண்டு தினமும் இரவு நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநாளும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், இன்றிரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு திங்கட்கிழமை காலையிலேயே தளர்த்தப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் அவசியத் தேவைகளின்றி மக்கள் வீடுகளை விட்டு வௌியில் வந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமென்பதுடன் வழக்குத் தாக்கல் செய்யப்படுமென தமிழக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, அங்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 26ம் திகதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருக்கின்றன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம்.

ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம்.

கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை.

சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி.

திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.

இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.

உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், உடற்பயிற்சி கூடங்களை மூட உத்தரவு.

மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்க அனுமதி.

No comments:

Post a Comment