வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் - தமிழ் நாடு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் - தமிழ் நாடு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களை, வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வந்து வைக்கப்பட்டுள்ளது. 

வரும் 2ம் தேதி ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையில், கட்சி வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், முகவர்கள் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள ஓட்டு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ஓட்டுச்சாவடிகளில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு, அவற்றை காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்து கொள்ளட்டும் என நம் வேட்பாளர்கள் இருக்கக்கூடாது.

ஏற்னவே நடந்த லோக்சபா தேர்தலில், மதுரை தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை மறந்துவிடக்கூடாது. 

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள மையங்களை ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரை கண்ணும் கருத்துமாக பார்ப்பது நமது கடமை.

No comments:

Post a Comment