ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதி பெறுவர் - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதி பெறுவர் - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

பதவியேற்று 100 ஆவது நாள் முடிவில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள தகுதியானவர்களாக ஆகிவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேசியதாவது இனி குழப்பம் விளைவிக்கும் விதிகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது. இதன்படி வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் வயது வந்தவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள தகுதியானவர்கள் ஆகின்றனர். அதற்கு முன் நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும்.

தனது 75 நாட்கள் பதவிக் காலத்தில் 15 கோடி டோஸ்கள் வரை தடுப்பூசி போடப்பட்டு உள்ளன. இதுவரை 75 சதவீத மூத்த குடிமக்களுக்கு ஒரு டோஸ் போடப்பட்டுள்ளது.

தன்னுடைய 100ஆவது நாள் பதவி காலம் முடிவில் 20 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கும் என எதிர்நோக்கி இருக்கிறேன்.

அமெரிக்காவில் கொரோனாவின் புதிய வகைகளுடன் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வயது வந்த அனைவரும் முழு அளவில் தடுப்பூசிகளை எடுத்து கொள்வதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும்.

பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் முகக் கவசங்களை அணிந்து கொள்ளுதல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad