தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19 பேர் கைது - நாட்டில் எங்கிருந்தாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19 பேர் கைது - நாட்டில் எங்கிருந்தாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிரிபத்கொடை, பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் விதி மீறல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பித்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 3,470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுமென அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

நீங்கள் நாட்டில் எங்கிருந்தாலும், உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசத்தை அணிய வேண்டும் என்பதோடு, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது முகக்கவசத்தை அகற்றுவதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.

மேலும் சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்றி விழாக்களை நடத்த அனுமதி கிடையாது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment