இந்தோனேசியாவில் கொட்டித் தீர்த்த கன மழை : பலி எண்ணிக்கை 101 ஆக உயர்வு, 80 பேர் மாயம் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

இந்தோனேசியாவில் கொட்டித் தீர்த்த கன மழை : பலி எண்ணிக்கை 101 ஆக உயர்வு, 80 பேர் மாயம்

இந்தோனேசியாவில் கொட்டித் தீர்த்த கன மழையால் பலி எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 பேர் மாயமாகி உள்ளனர்.

இந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த வாரம் இந்தோனேசியாவின் சில பகுதிகள் கடும் மழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad