இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முற்படுகின்றது - மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முற்படுகின்றது - மங்கள சமரவீர

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முற்படுகின்றது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியுள்ளார்.

இது குறித்து மங்கள சமரவீர அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முறையான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் தற்காலிகமான பொருளாதார மீட்சிக்காக சீனாவிடம் ஒரு பில்லியன் டொலர் நிதியைப் பெறவுள்ளது. இது எதனடிப்படையிலான பெறுகை? அத்தோடு இதனை மீளச் செலுத்துவதற்குரிய காலப்பகுதி எவ்வளவு? என்று மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் நிதியை (நாணய இடமாற்று அடிப்படை) வழங்குவதற்கு சீனா அனுமதியளித்திருப்பதாக நிதி, மூலதனச்சந்தை மற்றும் மற்றும் அரச தொழில் முயற்சி மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கிய நாளிதழொன்றில் நேற்றையதினம் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment