தீக்கிரையாக்கப்பட்ட கஜிமாவத்தை தொடர் குடியிருப்பு மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறும் வலியுறுத்தினார் சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

தீக்கிரையாக்கப்பட்ட கஜிமாவத்தை தொடர் குடியிருப்பு மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறும் வலியுறுத்தினார் சஜித் பிரேமதாச

(ஆர்.யசி)

கஜிமாவத்தையில் தொடர் குடியிருப்பு வீட்டுத் தொகுதி தீக்கிரைக்கு உள்ளானமையை அடுத்து அவர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்க மாட்டோம் எனவும், உரிய இடத்தில் பலகை வீடுகளை அமைத்துக் கொள்ளுமாறும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சபையில் குற்றம் சுமத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கும் தொடர்மாடி வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறும் வலியுறுத்தினார்.

வட கொழும்பு, மாதம்பிட்டிய கிராம சேவகர் பிரிவுக்கு உற்பட்ட கஜிமாவத்தையில் தொடர் குடியிருப்பு வீட்டுத் தொகுதி தீக்கிரைக்கு உள்ளானமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார்.

27 பலகை வீடுகள் தீக்கிரைக்கு உள்ளானமையினால் 200 குடும்பங்கள் நிற்கதிக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்துத்தர முடியாது, உரிய இடத்தில் மீண்டும் பலகை வீடுகளை அமைத்துக் கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே இவர்களுக்கு மீண்டும் பலகை வீடுகளை அமைத்துக் கொடுக்காது தொடர்மாடி வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, இந்த பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இப்போதும் அது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். எவ்வாறு இருப்பினும் கடந்த ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கான வீடுகளை முறையாக அமைத்துக் கொடுக்காதமையே இப்போதும் பிரச்சினைகள் எல காரணமாகும்.

எப்படியும் இது குறித்த நிலையான வேலைத்திட்டமொன்றை உருவாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment