பசறையில் மீண்டும் விபத்து - பெண் பலி, இருவருக்கு காயம் - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

பசறையில் மீண்டும் விபத்து - பெண் பலி, இருவருக்கு காயம்

பசறை - தொழும்புவத்தை, 3ஆம் கட்டை பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பசறையிலிருந்து படல்கும்புர நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று எதிர் திசையில் வந்த சிறிய ரக பாரவூர்தியுடன் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. அதில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad