காருக்குள் எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

காருக்குள் எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்பு

பகுதியளவில் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஹுவலை - கலுபோவில பகுதியில் வெகன் ஆர் ரக காரொன்றில் குறித்த வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிித்தார்.

நேற்றிரவு 11.30 மணியளவில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிித்தார்.

குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகியிருந்ததாகவும், மற்றும் உயிரிழந்த நபரின் சடலமும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

33 வயதுடைய கலுபோவில - பாத்திய மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad