ராவணா எல்ல வனப் பகுதியில் தீப் பரவல் - தீயை கட்டுப்படுத்த விமானப்படை ஹெலிக்கொப்டர் - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

ராவணா எல்ல வனப் பகுதியில் தீப் பரவல் - தீயை கட்டுப்படுத்த விமானப்படை ஹெலிக்கொப்டர்

பதுளை - இராவண எல்ல வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு bell 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததை தொடர்ந்தே bell 212ரக ஹெலிகொப்டரை, குறித்த தீயை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப் படை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஏற்பட்ட திடீர் தீப் பரவல் சம்பவத்தில், இதுவரை சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment