பொலிஸ் உத்தியோகத்தர் மரணம் - இராணுவ அதிகாரி கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

பொலிஸ் உத்தியோகத்தர் மரணம் - இராணுவ அதிகாரி கைது

(செ.தேன்மொழி)

ஹபரண - பொலன்னறுவை வீதியில் இராணுவ ட்ரக் வண்டியில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரண - பொலன்னறுவை வீதியில் நேற்று மாலை பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் இராணுவ ட்ரக் வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மின்னேரியா பிரதேசதச்சில் ஹசரெஸ்கொட்டுவ - கல்வோயா சந்தியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 53 வயதுடைய உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் இராணுவ ட்ரக் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad