பஸ் விபத்துக்கு பின்னர் பசறை வீதி குறித்து கண்டறிய விசாரணை - News View

About Us

About Us

Breaking

Sunday, March 21, 2021

பஸ் விபத்துக்கு பின்னர் பசறை வீதி குறித்து கண்டறிய விசாரணை

மொனராகலை - பதுளை பிரதான வீதியில் பசறை 13 ஆவது மையில் கல்லுக்கு அருகாமையில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசேட விசாரணையை ஆம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.டியிள்யூ.ஆர்.பிரேமசிறி இது தொடர்பாக தெரிவிக்கையில் இதற்கென குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

விபத்துக்கான உண்மையான காரணங்கள் மற்றும் இவ்வாறான விபத்துக்களை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பது இந்தக் குழுவின் பொறுப்பாகுமென்றும் தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வீதி பாதுகாப்பிற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததா என்பது குறித்து இந்த குழு கண்டறியும் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை விபத்தின் போது வீதியில் விழுந்திருந்த கல்லின் ஒரு பகுதியை துரிதமான அகற்றுவதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment