அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அல்லாது மக்களின் நலனுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பணியாற்ற வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
களனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து போட்டியிட எனக்கு அழைப்பு கிடைக்கப் பெற்றது. மீத்தோட்டமுல்ல பகுதியில் ஒரு கூட்டத்தில் வழக்கமான வேட்பாளராக கலந்துகொண்டேன். பெரும்பாலான முகங்களில் புத்துணர்ச்சியூட்டும் தோற்றம் இருக்கவில்லை. அங்கு இருந்த ஒரு பெண் ஒருவர் தனது வருத்தத்தை எனக்கு தெரிவித்திருந்தார்.
2016ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் களனி ஆற்றின் கரையில் இருந்த தமது வீடுகளை இழந்துவிட்டதாகவும், சிலர் நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும், இப்போது யூரியா உரங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு நெல் கிடங்கில் வசித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நான் அந்த இடத்தை பார்வையிட சென்றேன். அங்கு மனித வாழ்விடத்திற்கு பொருத்தமான நிபந்தனைகள் எதுவும் இல்லை. அழுக்கு காற்றால் இப்பகுதி நிறைந்திருந்தது.
உடனடியாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அழைத்து இதற்கான தீர்வை வழங்க வேண்டும் என்றும் இது தேர்தல் வாக்குறுதியாக கருதக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டேன்.
பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவின் தலைமையால் அப்பாவி மக்களின் கனவு இன்று சாத்தியமாகியுள்ளது என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment