அம்பாறை - உஹனை பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 சந்தேக நபர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 3, 2021

அம்பாறை - உஹனை பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 சந்தேக நபர்கள் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை - உஹனை பகுதியில் புதையல் தோண்டினார்கள் என்ற குற்றச்சாட்டினடிப்படையில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக உஹனை பொலிஸார் தெரிவித்தனர்.

புதையல் தோண்டுவதாக தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்பை மேற்கொண்டு இவர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை 03.03.2021 கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் அம்பாறை - உஹனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தனியார் நிறுவனமொன்றுக்காக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சந்தேக நபர்களை அம்பாறை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment