மக்களின் உயிரை காக்க காரைதீவு பிரதேச சபை முன்வர வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

மக்களின் உயிரை காக்க காரைதீவு பிரதேச சபை முன்வர வேண்டும்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி - காரைதீவு பிரதான பாதையின் தெரு விளக்குகள் பிந்திய இரவுகளில் அணைக்கப்படுவதால் பாதசாரிகளும் அண்மையில் வசிக்கும் குடியிருப்பாளர்களும் அதிகளவிலான இன்னல்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு காரைதீவு பிரதேச சபைக்கு அண்மையில் கையளிக்கப்பட்டிருக்கும் இந்த மின் விளக்கு தொகுதிகள் சில நாட்களில் பகல் வேளைகளில் ஒளிர்வதும் இரவு 10.00 மணியளவில் ஒவ்வொரு நாளும் அணைக்கப்பட்டு வருவதும் வாடிக்கையாக உள்ளது. 

நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளின் பிரதான பாதைகளில் ஒன்றான இந்த பாதையில் நூற்றுக்கணக்கான யானைகளின் நடமாட்டம் அண்மைய காலங்களில் உள்ள போதிலும் மின் விளக்குகளை அணைத்து விடும் செயலானது மிகப்பெரும் ஆபத்தான ஒன்றாக விளங்குகிறது.

காரைதீவு பிரதேச சபை இது விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து விபத்துக்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என பாதசாரிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.

மாளிகைக்காடு நிருபர்- நூருல் ஹுதா உமர்

No comments:

Post a Comment