விஞ்ஞான, விவசாய பட்டதாரி பயிலுனர்களை தேசிய உரச் செயலகத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

விஞ்ஞான, விவசாய பட்டதாரி பயிலுனர்களை தேசிய உரச் செயலகத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களில் விஞ்ஞான மற்றும் விவாசாய விஞ்ஞான பட்டதரிகளை விவசாய அமைச்சின்கீழ் தேசிய உரச் செயலகத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களில் தெரிவு செய்யப்பட்ட விஞ்ஞான மற்றும் விவசாய விஞ்ஞான பட்டதாரிகளுக்கான பயிற்சி சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

மாவட்ட உரச் செயலகப் உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜூதீன் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் உர உற்பத்தி மற்றும் வழங்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர்களான மகேஸ் கம்பன்பில, சுனில் கலுகம மற்றும் தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் ஜெ.ஏ.டீ. ரொசான் ஆகியோர் கலந்து கொண்டதுடன் nதிரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment