ஜப்பானில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

ஜப்பானில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு

ஜப்பானில் சமீப நாட்களாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. 

ஜப்பானில் சமீப நாட்களாக உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஜனவரி 29ஆம் திகதி தொடங்கிய வாரத்தில், 173 பேருக்கு கொரோனா தாக்கியதில், 8 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பெப்ரவரி 12ஆம் திகதியுடன் தொடங்கிய வாரத்தில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 15.2 சதவீதம் பேர் உருமாறிய கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள் ஆவர்.

அதுபோல், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் சமீப காலமாக உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment