ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாணத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் பகிரங்க சேவையாளர்களும் தங்களது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் ஏப்ரல் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாரால் கேட்கப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டின் 74ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தியமைக்கப்பட்ட 1975ம் ஆண்டின் 01ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்துகைச் சட்டத்தின் கீழ் சகல உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் பகிரங்க சேவையாளர்களும் தமது சொத்துக்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
எனவே தங்களது உள்ளுராட்சி மன்றங்களால் வழங்கப்பட்டுள்ள படிவங்களை முறையாகப் பூரணப்படுத்தி 2020.04.01 தொடக்கம் 2021.03.31 வரையான தங்களது சொத்துக்களைப்பற்றிய விவரங்களை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment