அரசியல்வாதியின் விசுவாசியாகக் காட்டிக் கொள்ள செயலாளர் எடுக்கும் முயற்சி சமூகத்தின் அர்ப்பணிப்பை கொச்சைப் படுத்தியுள்ளது - ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் அமீர் சாடல் - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

அரசியல்வாதியின் விசுவாசியாகக் காட்டிக் கொள்ள செயலாளர் எடுக்கும் முயற்சி சமூகத்தின் அர்ப்பணிப்பை கொச்சைப் படுத்தியுள்ளது - ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் அமீர் சாடல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மாவட்ட அரசியல்வாதியை திருப்திப்படுத்தும் நோக்கில் அவரின் விசுவாசியாக செயலாளர் செயற்படுவது ஒட்டு மொத்தமாக காட்டிக் கொள்ள எடுக்கும் முயற்சி பிரதேசத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதுடன் ஜனாஷா நல்லடக்கத்தில் இப்பிரதேச மக்களினது மக்கள் பிரதிநிதிகளதும் அர்ப்பணிப்புக்கள் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அமீர் பிரதேச சபை செயலாளர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று 25.03.2021ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற சபையின் 36ஆவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் அண்மையில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்கூட்டத்தில் கொரோனாவினால் மரணிக்கும் ஜானாஷாக்களை நல்லடக்கம் செய்வதற்கான முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் சபையின் செயலாளரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கடும் விமர்சனத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது.

தன்னை மாவட்ட அரசியல்வாதியின் விசுவாசியாகக் காட்டிக் கொள்ள ஜானாஷா நல்லடக்க விடயத்தில் இப்பிரதேச மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் அர்ப்பணிப்புக்கள் முன்னெடுப்புக்கள் மூடி மறைக்கப்பட்டு மாவட்டத்தில் எந்தவித முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளாது மெளனியாக இருந்த மாவட்ட அரசியல்வாதி கடைசி நேரத்தில் தனது பெயரை போட்டுக் கொள்ள செயலாளர் உறுதுணையாக செயற்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

குறித்த காணியைப் பெற்றுக் கொள்வதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, முன்னாள் தவிசாளர்களான கே.பி.எஸ்.ஹமீட், ஐ.ரீ.அஸ்மி, தற்போதைய தவிசாளர் ஏ.எம்.நெளபர் மற்றும் பிரதேச உறுப்பினர்களது பங்களிப்பு மறுக்க முடியாது.

அத்தோடு கொரோனா ஜானாஷா நல்லடக்க விடயத்திலும் காணியினை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளிலும் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகம் ஜனாஷா நலன்புரி அமைப்பு போன்றவற்றின் அர்ப்பணிப்புக்களை குறிப்பிட்டாக வேண்டும்.

இவ்வாறான நிலையில் மாவட்ட அரசியல்வாதியை மட்டும் முன்னிலைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொண்ட சபையின் தவிசாளர் உண்மைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment