தொற்றா நோய்க் கட்டுப்பாடும், உள்ளுர் உணவுப் பயன்பாட்டை மேம்படுத்தலும் எனும் தலைப்பிலான விழிப்பூட்டல் நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Monday, March 8, 2021

தொற்றா நோய்க் கட்டுப்பாடும், உள்ளுர் உணவுப் பயன்பாட்டை மேம்படுத்தலும் எனும் தலைப்பிலான விழிப்பூட்டல் நிகழ்வு

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

ஜனாதிபதியின் எண்ணக்கருவின் சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சமுர்த்தி திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் மாவட்டத்திற்கான நிகழ்ச்சித் திட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்திப் பிரிவினால் தொற்றா நோய்க் கட்டுப்பாடும், உள்ளுர் உணவுப் பயன்பாட்டை மேம்படுத்தலும் எனும் தலைப்பிலான விழிப்பூட்டல் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வளவாளர்களாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்கான், சமுகநல வைத்திய அதிகாரி எம்.எம்.எம்.நிம்சாத் ஆகியோர் கலந்து கொண்டு தொற்றா நோய்க் கட்டுப்பாடும், உள்ளுர் உணவுப் பயன்பாட்டை மேம்படுத்தல் தொடர்பில் கருத்துக்களை வழங்கினர்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் எஸ்.எம்.பஷீர், செயலக தலைமை முகாமையாளர் எஸ்.பி.எம்.ருமைஷ், வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரீப், சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் மற்றும்; சமுர்த்தி பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment