முல்லைத்தீவு நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்த வாகனம் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், பிள்ளை இருவர் காயம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 8, 2021

முல்லைத்தீவு நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்த வாகனம் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், பிள்ளை இருவர் காயம்

வெலிஓயாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் ஒன்று வேககட்டுப்பாட்டை மீறி முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் இன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

வெலிஓயாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற மகேந்திரா ரக் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை மீறி முல்லைத்தீவு நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்துள்ளது. 

இச்சம்பவத்தில் குறித்த வாகனத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், பிள்ளை இருவரும் காயமடைந்துள்ளார்கள். வாகன சாரதியான தந்தை எவ்வித காயங்களும் இன்றி உயிர் பிழைத்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பாெதுமக்கள், இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த விபத்து அதிவேகம் காரணமாக நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

எனினும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment