பெண்கள் தொழில் செய்யுமிடத்தில் அவர்களுக்களுக்கு எதிரான நடைபெறும் வன்முறைகளை ஒழிப்பதற்கான மசோதா ஒன்றை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் கொண்டுவர உள்ளதாக மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரோகினி கவிரத்ன தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நேற்று (4) நடைபெற்ற விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஐ.தே.க. தலைவி திருமதி சாந்தினி கொங்கஹகே ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் ரோகினி கவிரத்ன எம்.பி மேலும் தெரிவித்ததாவது, உலகில் உழைக்கும் பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) 108ஆவது ஆண்டு விழாவின் சி-190 சமவாயத்தை ஏற்றுக் கொண்டதாகவும், அதை இலங்கையில் அமல்படுத்துவதன் மூலம் பாலியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்றும் அவர் கூறினார்.
பணி செய்யும் இடத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பிரேரணை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதைச் செயல்படுத்த ஒரு மசோதாவை இயற்றுவது தொழில் அமைச்சரின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
(எம்.ஏ.அமீனுல்லா
No comments:
Post a Comment