முதலமைச்சர் வேட்பாளரை ரெலோவும் நியமிக்கலாம், சந்தர்ப்பம் உள்ளதாக கட்சிப் பேச்சாளர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

முதலமைச்சர் வேட்பாளரை ரெலோவும் நியமிக்கலாம், சந்தர்ப்பம் உள்ளதாக கட்சிப் பேச்சாளர் தெரிவிப்பு

தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் (ரெலோ) சிறந்ததொரு முதலமைச்சர் வேட்பாளரை இனங்கண்டு பிரேரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள்கூடி முடிவெடுத்தே தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழுக்கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் இடம்பெற்ற எமது கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் கட்சியின் பேச்சாளராக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். அதனடிப்படையில் எமது கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நடந்து கொண்டிருக்கும் அரசியல் நிலமைகள் விவாதிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என உதவி ஆணையாளர் தெரிவித்த கருத்தை வரவேற்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து அங்கத்துவ நாடுகளின் ஆதரவையும் கோரி நிற்கின்றோம். குறிப்பாக இந்தியாவின் ஆதரவை கோரி நிற்கின்றோம்.

ஆணையாளரின் விடயங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நீதி பொறிமுறை, பொறுக்கூறல் விடயத்தை பாராப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிவில் சமூக பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பல்கலைகழக மாணவர்கள் ஆரம்பித்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு எமது கட்சியும் பூரண ஆதவை வழங்குகின்றது.

No comments:

Post a Comment