"எனக்கு கொரோனா தொற்று" சச்சின் டெண்டுல்கர் ட்விற்றரில் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

"எனக்கு கொரோனா தொற்று" சச்சின் டெண்டுல்கர் ட்விற்றரில் தெரிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனது ட்விற்றர் கணக்கில் இடுகையொன்று இட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தான் அனைத்து அறிவுறுத்தல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வந்த போதிலும், ஒரு சில அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து மேற்கொண்ட சோதனையில் தனக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் அதில் தெரித்துள்ளார்.

ஆயினும், தனது வீட்டிலுள்ள ஏனையோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் தற்போது, வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதோடு, தனது வைத்தியரினால் வழங்கப்பட்டுள்ள உரிய பாதுகாப்பு ஆலோசனைகளையும் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கும், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உதவியளித்து வரும் சுகாதார தொழிற்துறையினருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் மார்ச் மாதம் முதல் கொவிட்-19 தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதோடு, தினமும் 50,000 இற்கும் அதிகமானோர் கொவிட்-19 தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad