ஹிருனிக்கா மீதான பிடியாணை மீளப் பெறப்பட்டது! - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

ஹிருனிக்கா மீதான பிடியாணை மீளப் பெறப்பட்டது!

கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜரானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவர் கடத்திய சம்பவம் தொடர்பில், ஹிருணிகா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் ஹிருணிகா முன்னிலையாகாத நிலையில் அவருக்கு இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கு இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியது.

அத்துடன், குறித்த வழக்கில் ஹிருணிகாவின் பிணையாளர்களை எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

கடந்த 2015 டிசம்பர் 21ஆம் திகதி, தெமட்டகொடை பிரதேசத்தில் வைத்து அமில பிரியந்த அமரசிங்க எனும் நபரை ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மெய்ப்பாதுகாவலர்கள், அவருக்கு சொந்தமான டிபென்டர் வாகனத்தில் வைத்து கடத்திய சம்பவம் தொடர்பான வழக்கில், 29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீத சாட்டப்பட்ட குற்றங்களை அவர் ஏற்க மறுத்திருந்தார்.

அதற்கமைய குறித்த வழக்கு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment