முன்பள்ளி கல்வி தொடர்பில் தேசிய கொள்கை வகுப்பு, ஆசிரியர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்கவும் கவனம் - அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா - News View

Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

முன்பள்ளி கல்வி தொடர்பில் தேசிய கொள்கை வகுப்பு, ஆசிரியர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்கவும் கவனம் - அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா

(இராஜதுரை ஹஷான்)

முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையொன்று வகுக்கப்பட்டுள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் சர்வதேச தரத்திலான முன்பள்ளி பாடசாலையினை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்பள்ளி கற்றல் நடவடிக்கை தொடர்பான வரைபு கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளி கல்வி நடவடிக்கைகளை முறை சார்ந்ததாக மேற்கொள்ளும் தேசிய கொள்கையொன்று இதுவரையிலும் இருந்ததில்லை. எனவே முறை சார்ந்த கொள்கையானது நிபுணர் குழுவொன்றின் மூலம் வகுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் பல ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கும் குறைந்தது தரமான பாலர் பாடசாலையொன்றையாவது ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அவை சர்வதேச தரத்திற்கமைவாக நடத்தப்படும்.

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad