தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க பிரஜாசக்தி நிகழ்ச்சி திட்டத்தினூடாக முயற்சி- நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்கிறார் அன்டன் ஜேசு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க பிரஜாசக்தி நிகழ்ச்சி திட்டத்தினூடாக முயற்சி- நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்கிறார் அன்டன் ஜேசு

"தெல்தெனிய பிரதேசத்தின் தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க பிரஜாசக்தி நிகழ்ச்சி திட்டத்தினூடாக முயற்சி எடுப்பதை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்." என ஜனநாயக மக்கள் முன்னணியின் மெத-தும்பர பிரதேச சபை உறுப்பினர் அன்டன் ஜேசு தெரிவித்தார்.

"தெல்தெனிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரங்களை பிரதேசத்தின் கல்தூரியா தோட்ட பிரிவின் 100 ஏக்கர் காணி மற்றும் மெத-தும்பர பகுதியின் வுட்சைட் தோட்டத்தின் 200 ஏக்கர் காணியும் வெளியாருக்கு பகிர்ந்து வழங்க பிரஜாசக்தியூடாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்து வழங்குவதை தடுத்து நிறுத்த நாம் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும். ஒரு அங்குல தோட்ட நிலத்தையேனும் வெளியாருக்கு வழங்க இடமளிக்க கூடாது. 

கடந்த அரசாங்கத்தில் நாம், தோட்ட காணிகளை வெளியார் பெற முடியாத வகையில் பாதுகாத்தோம். அதேவேலை, தோட்டத்தில் வாழுகின்ற எமது மக்களின் வீடமைப்பு தேவைக்கு காணிகள் பகிர்ந்து வழங்கினோம். பயிரடப்படாத காணிகளை எமது தோட்ட மக்களுக்கு பகிர்ந்தளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற ஏற்பாடுகளை ஆரம்பித்திருந்தோம். 

ஆனால், அவற்றை இன்று சிலர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து, எமது பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு, தமது நலனுக்காக வெளியாருக்கு பகிர்ந்து கொடுக்க முயற்சிக்கின்றனர். அப்பாவி தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த பார்க்காதீர்கள் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

தோட்ட மக்களுக்கான, அவர்களை சுய விவசாயிகளாக கட்டி எழுப்புவதற்கான, காணிகள் பெற்றுக் கொடுக்கும் வரை, தோட்ட காணிகளை அபகரிக்க இடமளிக்க மாட்டோம். அவ்வாறு முயற்சிப்பவர்களுக்கு மக்களோடு இணைந்து தகுந்த பாடம் புகட்டுவோம்." என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment