நீர் வழங்கல் அதிகார சபையின் அனைத்து ஊழியர்களின் கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கினார் அமைச்சர் வாசு - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

நீர் வழங்கல் அதிகார சபையின் அனைத்து ஊழியர்களின் கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கினார் அமைச்சர் வாசு

(இராஜதுரை ஹஷான்)

தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அனைத்து ஊழியர்களின் மாத கொடுப்பனவை 25 சதவீதத்தால் அதிகரிக்குமாறு நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் முகாமைத்துவ பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதிகார சபையின் பொறியியலாளர்கள், தொழினுட்ப உதவியாளர்கள் சிற்றூழியர்கள் என அனைத்து தரப்பினரும் இத்தீர்மானத்தில் உள்வாங்கப்படுவார்கள்.

நீர் வழங்கல் அதிகார சபையின் தொழிற்சங்கத்தினருடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து அமைசச்ர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு எதிர்த்தரப்பினர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து முறையான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் வெற்றி பெறும் இதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியம். 

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது.

நீர் வழங்கள் அதிகார சபையின் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை பத்திரம் ஊடாக சாதகமான தீர்வு வெகுவிரைவில் கிடைக்கப் பெறும் என அமைச்சர் தொழிற்சங்கத்தினரிடம் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad