க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார் கல்வி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார் கல்வி அமைச்சர்

நடந்து முடிந்த 2020 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இன்றையதினம் (24) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை அறிவித்தார்.

ஒரு வருடத்திற்கு மேலாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத வகையில் கடந்த வருடத்திற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் நடைபெற்று முடிவடைந்தது. 

இந்த பரீட்சைக்கான வினாப்பத்திரங்கள் கடுமையானதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருக்கும் குற்றாச்சாட்டு தொடர்பில் அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

க.பொ.த. உயர் தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை ஆகஸ்ட் மாதம் நடத்துவது குறித்து இன்னும் இறுதித்தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment