மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - ஒருவர் கைது

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி காட்டுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை வியாழக்கிழமை (25) பொலிசார் முற்றுகையிட்டு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் 400 லீற்றர் கோடாவை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவதினமான வியாழக்கிழமை மாலை குறித்த பகுதியிலுள்ள காட்டுப் பகுயில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்துவரும் நிலையத்தை பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கதிரவெளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன் 400 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad