மாகாண சபை முறைமை கொரோனா வைரஸை விட பாரதூரமானது - முருத்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

மாகாண சபை முறைமை கொரோனா வைரஸை விட பாரதூரமானது - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

(எம்.மனோசித்ரா)

மாகாண சபை முறைமை என்பது கொரோனா வைரஸை விடவும் பாரதூரமானதாகும். இலங்கைக்கு மாகாண சபை முறைமை பொறுத்தமற்றது என்ற நிலைப்பாட்டில் மகா சங்கத்தினர் இன்றும் உறுதியாகவுள்ளனர் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

இலங்கையில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போதே நாம் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தோம்.

இலங்கையை போன்ற சிறிய நாட்டுக்கு மாகாண சபை முறைமை பொறுத்தமானதாக இருக்காது. எனவே மாகாண சபை முறைமை மீண்டும் ஆரம்பிக்கப்படுமாயின் அது பாரிய அழிவாகும்.

எனினும் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தி மாகாண சபைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad