பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லுலா டி சில்வா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. இது அவர் 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வழி ஏற்படுத்தியுள்ளது.

இடதுசாரி அரசியலில் செல்வாக்கு மிக்கவரான லுலா 18 மாதங்கள் சிறையில் கழித்த நிலையில் 2019 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். அரசியல்வாதிகள் மற்றும் பெரும் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற்றதாகவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

எனினும் அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் 2003 தொடக்கம் 2010 வரை பிரேசில் ஜனாதிபதியாக இருந்த 75 வயதான லூலா அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பதவியில் இருக்கும் வலதுசாரி ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோவை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் வைத்து இந்தத் தீர்ப்பு பற்றி கருத்து வெளியிட்ட ஜனாதிபதி பொல்சொனாரோ, உச்ச நீதிமன்ற நீதிபதி பக்கச்சார்பாக நடப்பதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment