சர்வதேச கிரிக்கெட் தரப்படுத்தலில் பின்நோக்கிச் சென்றமைக்கு இலங்கை கிரிக்கெட் சபையே காரணம் - திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

சர்வதேச கிரிக்கெட் தரப்படுத்தலில் பின்நோக்கிச் சென்றமைக்கு இலங்கை கிரிக்கெட் சபையே காரணம் - திஸ்ஸ அத்தநாயக்க

(எம்.மனோசித்ரா)

சர்வதேச கிரிக்கட் நிர்வாக தரப்படுத்தலில் இலங்கை 10 ஆவது இடத்திற்கு பின்நோக்கிச் சென்றுள்ளது. கிரிக்கட் நிர்வாகம் மற்றும் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை போன்வற்றால் இலங்கையில் கிரிக்கட் துறையை மேம்படுத்த முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையே இதற்கு காரணமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

பல மாதங்கள் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் நடைபெறவில்லை. எனினும் தற்போது மீண்டும் அவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கட் சபை வெளியிட்டுள்ள தரப்படுத்தலில் இலங்கை பத்தாவது இடத்திற்கு பின்நோக்கிச் சென்றுள்ளது.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றியதன் பின்னர் சர்வதே கிரிக்கட் சபை தரப்படுத்தலில் இலங்கை முதல் 8 இடங்களுக்குள் இடம்பிடிக்கும். எனினும் இம்முறை 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். 

ஆப்கானிஸ்தான் கூட இலங்கைக்கு முன்னதான இடத்தில் காணப்படுகிறது. இவ்வாறு இலங்கை பின்வாங்கியுள்ளமையால் உலகக் கிண்ண தொடரில் போட்டிடுவதற்கு முதலாவது சுற்றிலேயே தெரிவாக முடியாத நிலை ஏற்படும். இதன் மூலம் உலகக் கிண்ண தொடர்பில் இலங்கைக்கு வாய்ப்புக்கள் கிடைக்காமல் போகக் கூடிய நிலைமை காணப்படுகிற என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment