கடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்மந்தபட்ட பாராளுமன்ற விவாதத்தின் போது தாங்கள் கூறிய கருத்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கவலையை தோற்றுவித்துள்ளது.
நீங்கள் கூறிய கருத்தின் தாக்கம் பெரும்பான்மை மக்களின் மத்தியில் முஸ்லிம்கள் மீதான சந்தேக கண்ணோட்டத்தை மேலும் வலுப்பெற செய்துள்ளது மட்டுமல்லாமல் இனவாத சக்திகளின் கருத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
தீவிரவாத சிந்தனை கொண்ட சில இளைஞர்கள் அல்லது சிறு குழு கலிபா ஆட்சியை நாட்டில் உருவாக்கும் சிந்தனையில் என்ற வார்த்தை பிரயோகம் பெரும்பான்மை பாமர மக்களிடத்தில் பாறிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியாமல் இருக்காது என்று நினைக்கிறேன்.
முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயல்பாடுகள் பற்றியும் நல்லாட்சியை உருவாக்க சர்வதேச சக்திகளின் வியூகம் பற்றியும் நன்கு தெரிந்த நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இங்கு சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது சமூகங்களை ஏமாற்றி அரசியல் நடத்தும் விடயம் உங்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய உங்கள் குற்றச்சாட்டு முஸ்லிம் சமூகத்தில் இருந்து வரும் உங்கள் மீதான குற்றச்சாட்டு நியாயமானதாகவே கருத ஏதுவாக உள்ளது.
தீவிரவாத சிந்தனை கொண்ட குழு கிழக்கில் நல்லாட்சி காலத்தில் ஊடுருவிய விடயம் அரச தரப்புக்கு நன்கு தெரியும். அது அடிப்படைவாத சிந்தனையை பரப்பி இளைஞர்களை தீவிரவாதியாக பரிணாமம் செய்யும் உளவியல் தந்திரத்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறது என்பதும் பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியும். அப்படியான ஒரு அமைப்பின் மொத்த செயல்பாட்டையும் வேறோடு களைந்து விடவே அரசாங்கம் பல திட்டங்களை வகுத்து செயல்படுகிறது.
இதனிடையே நீங்கள் சொன்ன கருத்து ஒரு சமூகத்தின் மீதான குற்றச்சாட்டாகவே முஸ்லிம் சமூகத்தால் பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து தொலைக்காட்சி நேர்காணலில் உங்கள் கருத்துக்கு நீங்கள் அளித்த பதில் ஏற்புடையதாக இருக்கவில்லை.
நீங்கள் சொன்ன பதில் ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதி சொல்லும் பதிலாக அமையவில்லை என்பதை அந்த நேர்காணல் பார்த்த முஸ்லிம் சமுகத்தின் ஆதங்கமாக உள்ளது.
எனவே கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களே சுயநல அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட ஒரு சமூகத்தின் விடிவுக்காக அரசியல் செய்யும் நீங்கள் முஸ்லிம் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது பெரும்பான்மை மக்களின் பார்வையும் தப்பான கண்ணோட்டத்தில் திசை திரும்பும் வகையில் உயர் சபையில் சொன்ன கருத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கிழக்கு மக்களின் சார்பாக பனிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
M.I.M.Hilmy
President
Anti Terrorism's people federation
No comments:
Post a Comment