ஜப்பான் விமான நிலைய தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனாவுக்கு பெண் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, March 28, 2021

ஜப்பான் விமான நிலைய தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனாவுக்கு பெண் பலி

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் எகிப்தில் இருந்து விமானம் மூலம் டோக்கியோ திரும்பினார். 

இதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் அந்தப் பெண் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்றுக்கான‌ அறிகுறிகள் இருப்பது தெரிவந்தது. எனினும் அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தல் மையத்திலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு மருந்துவ பரிசோதனை செய்வதற்காக சுகாதார ஊழியர்கள் அவனது அறைக்கு சென்றனர்.‌ அப்போது அங்கு அந்தப் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொரோனா தொற்று காரணமாக இறந்தது தெரியவந்தது. 

ஜப்பானில் தனிமைப்படுத்தல் மையத்தில் நிகழ்ந்த முதல் கொரோனா உயிரிழப்பு இதுவாகும்.

No comments:

Post a Comment