'ஸ்புட்னிக் வீ' (Sputnik V) ரஷ்ய கொவிட்-19 தடுப்பூசியை இலங்கையின் அவசர தேவைக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் விசேட நிபுணர் குழுவினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில், ஏற்கனவே ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்திய தயாரிப்பான கொவிஷீல்ட் தடுப்பூசியானது தற்போது இலங்கையில் வழங்கப்பட்டு வருவதோடு, இதுவரை 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு அதன் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment