நாமனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டு, ஜனநாயக நாடாக மீண்டெழ வேண்டும் - கரு ஜயசூரிய - News View

Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

நாமனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டு, ஜனநாயக நாடாக மீண்டெழ வேண்டும் - கரு ஜயசூரிய

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நாமனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனநாயக நாடொன்றாக மீண்டெழ வேண்டும் என்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து கரு ஜயசூரிய அவரது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, ஜெனிவாவில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது ஒரே நாட்டவர் என்ற வகையில் நாமனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அதேவேளை நாட்டு மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஏதேனும் குறைகள் மற்றும் விடுபாடுகள் இருப்பின், அவை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

உண்மையான ஜனநாயக நாடொன்றாக நாம் மீண்டெழ வேண்டும். ஏனெனில் ஒருபோதும் நாம் தனித்து செயற்பட முடியாது என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad