மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது பாகிஸ்தான் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அடிக்கடி ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் தரையில் இருந்து சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய ‘காஸ்னவி’ என்ற அணு ஏவுகணையை சோதனை செய்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. ‌ஷகீன்-1ஏ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் நேற்று சோதனை செய்தது.

இந்த ஏவுகணை தரையில் இருந்து புறப்பட்டு தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும். 900 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடியது ஆகும். மேலும் அணு ஆயுதம் உள்ளிட்ட எந்த ஆயுதத்தையும் தாங்கி செல்லும்.

‘‌ஷகீன்-1ஏ’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இருந்தது என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad