உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிராக பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 3, 2021

உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிராக பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு சென்ற மன்னார் சமூக மேம்பாட்டு அபிவிருத்தி நிறுவனம், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இரணைதீவு மக்கள் இணைந்து குறித்த மகஜரை கையளித்தனர்.

கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பிரதேசம் பொருத்தமற்ற பிரதேசம் என்பதை விளங்கிக் கொண்டு அரசாங்கம் அதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment