அரசாங்கத்தால் நிர்க்கதியாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

அரசாங்கத்தால் நிர்க்கதியாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள்

மிதும் கான்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் பெருமளவான மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தற்போது வரை முழுமையடையாத நிலையில் காணப்படுகின்றது.

புதிய அரசாங்கத்தினால் புதிய வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தொடர்சியாக கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்ளையே குறித்த வீட்டுத்திட்ட பயணாளிகளாக தெரிவு செய்து திட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மிகுதிப் பணம் கிடைக்கப்படாத நிலையில் இன்னும் மக்கள் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் அமைச்சர்களிடம் நேரடியாகவும் கடிதங்கள் மூலம் கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் மேற்கொண்டும் இன்று வரை மேலதிக கொடுப்பணவுகள் எவையும் வழங்கப்படாமல் குறித்த மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அதே நேரம் வீட்டு கட்டுமானத்திற்கென பெற்றுக் கொண்ட மேலதிக கடனைச் செலுத்த முடியாத நிலையில் தற்போது கடனாளியாக உள்ளனர். அதே நேரம் பல்வேறு உடமைகளை அடகு வைத்து தற்போது அதனை மீட்டுக் கொள்ள முடியாத நிலையில் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கம் குறித்த வீட்டுத்திட்டத்தை முழுமையாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தும் இன்று வரை குறித்த வீட்டுத்திட்ட பயணாளிகளுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை.

இந்த விடையத்தில் அரசாங்கம் சரியான தீர்வை விரைவில் வழங்கி மக்களுக்கு கொடுக்க வேண்டிய மிகுதி கொடுப்பனவை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இணைத்து வடக்கு கிழக்கில் போராட்டத்தை முன்னெடுக்கின்ற நிலை ஏற்படும். எனவே விரைவில் அரசு உரிய பதிலை கூறவேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad