சவுதி அரேபியாவின் தெற்கு நகரமான ஜசானில் ஈரான் ஆதரவு ஹவுத்தி போராளிகள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக சவுதி சிவில் பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று சவுதி குடிமக்களும், இரண்டு யேமன் குடிமக்களுமே காயமடைந்துள்ளனர்.
சவுதிய சிவில் பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், சவுதி - யேமன் எல்லைக்கு வடக்கே அமைந்துள்ள கடலோர நகரத்தில் உள்ள கடைகளும் கார்களும் ஏவுகணை தாக்குதல் காரணமாக நொறுங்கியுள்ளதை வெளிக்காட்டுகின்றன.
ரியாத் மீது ஹவுத்திகள் நடத்திய ஒரு ஏவுகணைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியதாகவும், இராச்சியத்தின் தெற்கில் உள்ள நகரங்களை நோக்கி ஏவப்பட்ட ஆறு ஆயுத ட்ரோன்களை அழித்ததாகவும் அரபு கூட்டணி கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜசான் பகுதியில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டது எந்த வகையான ஏவுகணை என்று தெளிவாக தெரியவில்லை.
No comments:
Post a Comment