பசறை - லுணகல வீதியில் 13 ஆவது மைல் பகுதியில் நேற்றையதினம் 14 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பயங்கர பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ் சாரதி மற்றும் டிப்பர் வாகன சாரதி ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை பதில் நீதவான் சுஜீவ சில்வா இன்று (21) உத்தரவு பிறப்பித்தார்.
14 பயணிகளின் மரணம் மற்றும் மேலும் பலருக்கு காயங்களை ஏற்படுத்திமை பொறுப்பற்ற வகையில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் விபத்தை தடுக்க தவறிமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பசறை பொலிசாரினால் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பதில் நீதவான் பதுளை பொது வைத்தியசாலைக்கு சென்று இவரை பரிசோதனை செய்த பின்னர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதற்கமைவாக வைத்தியசாலையிலேயே சிறைச்சாலை அதிகாரிகளினால் இவர் பொறுப்பேற்கப்பட்டார்.
பொறுப்பற்ற விதத்தில் வாகனத்தை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பதுளை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட டிப்பர் வாகன சாரதி பதுளை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜார் செய்யப்பட்ட பின்னர் அவர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதேவேளை, இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் சரிந்திருந்த பாரிய கல்லை அங்கிருந்து அகற்றுவதற்கு ஊவா மாகாண ஆளுநர் நேற்று மாலை உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கல்லை வீதியில் இருந்து அகற்றுவதற்கு ஒப்பந்தக்காரர்களுக்கு பல மாதங்களுக்கு முன்னர் அறிவுறுத்தல் வழங்கியிருந்ததாகவும் அவர்கள் அதனை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
நேற்று இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் காயடைந்த 31 பேர் காயமடைந்தார்கள். அவர்களில் 9 பேருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படடது.
நேற்று விபத்து இடம்பெற்ற வீதியில் இரும்பு தூண்களை இட்டு பாதுகாப்பு வேலைகளை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீதி எச்சரிக்கை பலகைகளும் பொருத்தப்படவுள்ளன.
வாகனங்களின் வேவகத்தை கட்டுப்படுத்வதற்காக வீதிகளில் வேகத் தடைகளை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment