கொழும்பு கஜ்ஜிமா தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்ளுக்கு ஜனகன் வாழ்வாதார உதவிகள்...! - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

கொழும்பு கஜ்ஜிமா தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்ளுக்கு ஜனகன் வாழ்வாதார உதவிகள்...!

கொழும்பு கஜ்ஜிமா தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்ளுக்கு கலாநிதி ஜனகன் நேரில் சென்று பார்வையிட்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.

அண்மையில் கொழும்பு கிராண்பாஸ் கஜ்ஜிமா தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டு குறை, நிறைகளை கேட்டறிந்ததுடன், பாதிப்புற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிக்கான வீட்டு உபகரண பொருட்களை ஜனனம் அறக்கட்டளையின் தேசியத் தலைவரும், சமூக சேவையாளருமான கலாநிதி வி.ஜனகன் பாதிப்புற்ற மக்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான உமா சந்திர பிரகாஷ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் எதிர்காலத்தில் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு தன்னால் முடியுமான உதவி திட்டங்களை முன்னெடுப்பதாகவும் கலாநிதி ஜனகன் உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad