வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் கஞ்சாவுடன் இளைஞர் கைது! - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் கஞ்சாவுடன் இளைஞர் கைது!

வவுனியா, மடுகந்தைப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞனை மடுகந்தை பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் வழிமறித்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 275 கிராம் கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞரையும், அவர் பயணம் செய்த மோட்டர் சைக்கிள் மற்றும் உடமையில் இருந்து மீட்கப்பட்ட கேரளா கஞ்சா என்பவற்றை விசேட அதிரடிப்படையினர் வவுனியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad