தென்னாபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

தென்னாபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு

தென்னாபிரிக்காவில் பரவி வரும், மிக வேகமான பரவலைக் கொண்ட கொரோனா வைரஸ் திரிபின் தொற்றைக் கொண்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் பரவி வரும் புதிய வீரியம் கொண்ட உருமாறிய கொவிட்-19 (B.1.351) என்ற புதிய வைரஸ் வகையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.

தன்சானியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரியிலேயே இவ்வாறு குறித்த கொரோனா வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தொடர்பான மேலதிக தரவுகள் சுகாதார அமைச்சிடம் காணப்படுவதாகவும் டொக்டர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad